மும்பையில் பெண் மருத்துவர் ஒருவர் தான் இறக்கப்போவதாக இணையத்தளத்தில் பதிவிட்ட 36 மணி நேரங்களில் உயிரிழந்துவிட்டார்.
மும்பை மாநிலத்தில் சேவ்ரி காசநோய் மருத்துவமனையின் தலைமை பெண் மருத்துவராக இருப்பவர் டாக்டர் மனீஷா யாதவ்(51). இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மனீஷா தன் இணையதள பக்கத்தில் கொரோனாவிலிருந்து நான் மீண்டு வர மாட்டேன், உயிர் பிழைக்க மாட்டேன், உயிரிழந்து விடுவேன் என்று பதிவிட்டிருந்தார். மனீஷா இவ்வாறு பதிவிட்டு சுமார் 36 மணி நேரத்திற்கு பிறகு அவர் கூறியது போலவே உயிரிழந்து விட்டார்.