Categories
தேசிய செய்திகள்

“நான் உயிருடன் தான் இருக்கிறேன்”… அதிகாரிகளிடம் நிரூபிக்க போராடும் முதியவர்…. நடந்தது என்ன…?

உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான் பூர் மாவட்டம் திலகர் தாலுகாவை சேர்ந்த ஓம்பிரகாஷ் (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் இறந்து விட்டதாக ஒரு வருடத்திற்கு முன் அரசு ஆவணங்களில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதனை அறியாமல் அவர் முதியோர் உதவித்தொகை பெற வங்கிக்கு சென்றபோது அவர் இறந்து விட்டதாக அவரிடமே வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சடைந்த அவர் தான் உயிருடன் இருப்பதை அதிகாரிகளிடம் நிரூபிக்க போராடி வருகின்றார். இந்த நிலையில் தனது கரும்பு சர்க்கரை ஆலை தனது வங்கிக் கணக்கில் செலுத்திய பணத்தை கூட தன்னால் எடுக்க முடியவில்லை என அவர் வேதனையுடன் கூறியுள்ளார். முதியோர் உதவித் தொகையும் கிடைக்காததால் செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது சோக கதையை கேட்ட தில்கர் தாசில்தார் ஞானந்திர சிங் முதியவரின் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு தவறு சரி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |