நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 1 வது வார்டு அதிமுக வேட்பாளராக விஜயன் போட்டியிடுகிறார். இவர் செங்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், அதிமுக என்னை கைவிட்டு விட்டது. நான் மக்களை நம்பித்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். ஒருவேளை நான் தேர்தலில் தோற்று விட்டால் உயிரோடு இருக்க மாட்டேன். அவ்வாறு நான் இறந்த பிறகு எனக்கு முதல் மாலையை இந்த ஊர் மக்கள் தான் அணிவிக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
Categories