விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவில் வெண்பா எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரீனா. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பரீனா ஏராளமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது வழக்கம். இதனிடையே தற்போது அவர் தனது ரசிகர்களுடன் நேரலையில் பேசியுள்ளார்.
அப்போது ரசிகர்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் பரீனா பதில் அளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த தவறான முடிவு எது என்று கேட்டதற்கு பரீனா நாச்சியார்புரம் என கூறியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் நாச்சியார்புரம். இது ஆரம்பித்த வேகத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நாச்சியார்புரம் பற்றி வேறு எந்த தகவலையும் கூறாத பரீனா பாசிட்டிவ்வான எண்ணங்கள் தான் எனது மகிழ்ச்சிக்கு காரணம் என்று கூறியுள்ளார்.