Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“நான் எந்த தவறும் செய்யல” தற்கொலை செய்த ஆசிரியரின் பரபரப்பு கடிதம்…!!!

கரூர் மாவட்டம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் இவர் பணிபுரிந்து வந்த அதே பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்வதாக கூறி கடிதம் எழுதி விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் மாணவி படித்த பள்ளியின் ஆசிரியர் சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் எழுதியுள்ள கடிதம் சிக்கியுள்ளது. அதில், “மாணவர்கள் என்னை தவறாக நினைக்கிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் இப்படி கூறுகிறார்கள்? என்று எழுதியுள்ளார். இது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |