Categories
மாநில செய்திகள்

“நான் எந்த மனிதனையும் கடவுளாக நினைக்கவில்லை”‌ அமைச்சர் பீடிஆரின் பேச்சு…. செம வைரல்….!!!

தமிழகத்தில் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் இருக்கிறார். இவர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை என்று அனைத்து மாநிலங்களுக்கும் ஆதரவாக பேசினார். அதன் பிறகு கோவா அமைச்சருடன் மல்லுக்கட்டு, வானதி சீனிவாசனுடன் வார்த்தை போர் என சமீப காலமாகவே பிடிஆர் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இதன் காரணமாக பாஜக கட்சியினரால் பிடிஆர் விமர்சிக்கப்பட்டாலும், பலர் பீடிஆருக்கு ஆதரவு தெரிவித்தே வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி மாநில அரசுகளின் இலவச திட்டங்களால் தான் நாடு வளர்ச்சி அடைவது தடுக்கப்படுகிறது என்று கூறினார். இந்த கருத்துக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இலவச திட்டங்கள் சமீப காலமாகவே பேச்சில் இருக்கிறது.

இந்த இலவச திட்டங்களை தடுக்க வேண்டும் என்று பாஜக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இலவச திட்டங்கள் வேறு, சமூக நலத்திட்டங்கள் வேறு என்று கூறினார். இந்நிலையில் வட இந்திய தொலைக்காட்சி சேனலுக்கு தமிழக நிதி அமைச்சர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியின் போது பிரதமர் மோடி இலவச திட்டங்கள் குறித்து சொன்ன கருத்து சரிதானா என அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் நீங்கள் சொன்ன கருத்தை சொல்வதற்கு உங்களுக்கு அடிப்படை அரசியல் அறிவு இருக்க வேண்டும் என்றார். அதன் பிறகு உங்களுக்கு சிறப்பு நிபுணத்துவம் இருக்கிறதா? பொருளாதாரத்தில் நீங்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளீர்களா? நோபல் பரிசு பெற்றவர்களா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

நீங்கள் வேலை வாய்ப்பு, பொருளாதாரம், தனிநபர் வருமானம் போன்றவற்றை அதிகரித்து விட்டீர்கள் என்றாலும், கடனை குறைத்து விட்டீர்கள் என்றாலும் இது மாதிரியான கேள்விகளை கேட்கலாம். இதில் எதுவுமே செய்யாமல் தனி நபர் ஒருவர் கூறிய கருத்தை எதற்காக கேட்கிறீர்கள் என்றார். எங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். நான் முதல்வர் கொடுக்கும் பணியினை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். குறிப்பாக சொல்ல போனால் மத்திய அரசை விட நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நான் கடவுளை நம்புகிறேன் என்றும் எந்த ஒரு தனி மனிதனையும் நான் கடவுளாக ஏற்கவில்லை. ஒரு தனி மனிதன் சொல்லும் கருத்தை எதற்காக நான் ஏற்க வேண்டும் என்று கூறினார். இது தொடர்பான பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பீடிஆரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியுள்ளது.

Categories

Tech |