Categories
சினிமா தமிழ் சினிமா

நான் என்ன உன்னோட பொண்டாட்டியா?…. செருப்பு பிஞ்சிடும்….. பயில்வான் ரங்கநாதனை புரட்டி எடுத்த நடிகை…!!!!

Youtube சேனல் மூலமாக சினிமா பிரபலங்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகைகளை பற்றி மிகவும் மோசமாக விமர்சித்து வரும் இவரிடம் சின்னத்திரை நடிகை ஒருவர் நடுரோட்டில் சண்டை போட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரேகா நாயர் பல விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர்.  சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்திருந்தார் .

அதாவது அந்த படத்தில் அவர் அரை நிர்வாணமாக நடித்தார். இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. கதைக்கு தேவையாக இருந்த பட்சத்தில் தான் அப்படி நடித்தேன் என்று அவர் கூறினார். ஆனாலும் இது பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் மிகவும் மோசமாக பேசியிருந்தார். அதாவது அவர் நடிப்பில் எந்த எல்லைக்கும் செல்வார் என்றும், இயக்குனர் பார்த்திபனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்றும் தரக்குறைவாக பேசினார். இந்நிலையில் நேற்று பயில்வான் ரங்க நாதனை எதிர்ச்சியாக ரோட்டில் பார்த்த ரேகா நாயர் அவரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.

என்னை பற்றி எதுவும் தெரியாத நீங்கள் எப்படி பேசலாம் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரங்கநாதன் நீ அப்படி நடித்தால் நான் அப்படித்தான் பேசுவேன் என்று கூற ஆத்திரத்தில் ரேகா நான் உன் மனைவி இல்லை என்னை பற்றி பேசுவதற்கு, இதற்கு மேல் அசிங்கமாக பேசினால் செருப்பு பிஞ்சிடும் என்று ஆக்ரோஷமாக ரோட்டில் சண்டை போட்டுள்ளன. இதனால் அந்த இடமே பரபரப்பானது. பின்னர் சுற்றி இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |