Categories
சினிமா

“நான் என்ன சொல்வது…. எல்லாமே கடவுள் காட்டும் வழி”…. அப்பா செல்லும் வழியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்….!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் தனுஷுக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் இவர்களுக்கு உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அண்மையில் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்வு முடிவுக்கு வந்ததாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் அறிவித்தனர். இச்சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

மேலும் இது தொடர்பாக தங்கள் சமூக வலைதளங்களில் இருவரும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விவாகரத்து அறிவிப்புக்குப் பின் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கினார். மேலும் ஐதராபாத்தில் தங்கி இப்பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பின் சிறிது கால ஓய்விற்குப் பின் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ரொமாண்டிக் பாடல் ஒன்றை தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கினார்.

மேலும் இந்த பாடலின் புரோமோ வீடியோவை நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார். அன்கித் திவாரி இசையமைத்துள்ள  “முசாபிர்”  என்ற பாடல் பல மொழிகளில் தயாராகி உள்ளது. மேலும் இந்த பாடலை அனிருத் தமிழிலும், சாகர் தெலுங்கிலும் மற்றும் ரஞ்சித் கோவிந்த் மலையாளத்திலும் பாடி வருகின்றனர். இதனை அடுத்து இப்பாடலின் புரோமோவை வெளியிட்ட ஐஸ்வர்யா, “நான் என்ன சொல்வது கடவுள் வழிகாட்டுகிறார்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த வீடியோவுக்கு  பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |