Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் என்ன டாக்டரா….? அரசியலில் இருந்து ஓரங்கட்டவே….. என் மீது இந்த பலி….. குமுறிய சசிகலா…!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், அப்போதைய துணைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்,சசிகலா, மருத்துவர் சிவகுமார் ஆகியோரை விசாரிக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை அருகில் யாரையும் விடாமல் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டவர் சசிகலா என்பதனால் அவர் மீது பல தரப்பிலும் சந்தேகம் இருந்து வந்தது. இப்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் சசிகலா மீது சந்தேகத்தை ஏற்படுத்த விதமாக அமைந்திருந்ததால் சசிகலாவிற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெ.,வின் மரணத்தை தொடர்ந்து அரசியலாக்குவதை யாரும் ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான் ஒருபோதும் தலையிட்டது கிடையாது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கருத்துக்களை சொல்லக்கூடிய அளவிற்கு நான் எந்த ஒரு மருத்துவ படிப்புகளையும் படித்தது கிடையாது. என்னென்ன பரிசோதனை? எந்தெந்த மருந்துகள்? கொடுக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினரை முடிவு செய்தார்கள்.

ஜெயலலிதாவிற்கு முதல் தர சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதை என்னுடைய நோக்கமாக இருந்தது. என்மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜெ.,வின் மரணத்தை சர்ச்சையாகி விசாரணை ஆணைய அறிக்கை அரசியலாக மாற்றி விட்டார்கள். அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்ட வேறு வழிகளை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |