பிரபல நாட்டின் பயங்கரவாதியான பின்லேடன் மகன் உமர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக விளங்கும் பென்டகன் மீதும், உலக வர்த்தக மையம் மீதும் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். 2021-ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி பின்லேடன் கொல்லப்பட்டார். இவரின் மகன் உமர் பின்லேடன் ஆவார். தொழிலதிபரான இவர் தற்போது தனது குடும்பத்துடன் பிரான்சில் உள்ள நார்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.
இவர் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி சன் பத்திரிக்கைக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது. நான் ஆப்கானிஸ்தானில் உள்ள தோரா போராவில் குழந்தை பருவத்தை கழித்தேன். அந்த இடம் முழுவதும் ரசாயன ஆயுதங்களை சேகரிக்க பயன்படுத்தப்பட்டது. அதனை எனது தந்தையின் உதவியாளர்கள் சோதனை செய்தனர். ஆனால் எனக்கு அந்த இடம் பிடிக்கவில்லை. பின்னர் அவர்கள் எனக்கும் பயங்கரவாத பயிற்சி முகாம்களில் ஏ.கே. 47 துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி அளித்தனர். ஏனென்றால் நான் பயங்கரவாதியாக ஆக வேண்டும் என்பதுதான் எனது அப்பாவின் விருப்பம். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. இதனால் நான் கடந்த 2021-ஆண்டு அங்கிருந்து வெளியேறி விட்டேன்.
இந்நிலையில் நான் வெளியேறிய போது என் அப்பாவிடம் குட்பை சொன்னது தான் நான் அவரிடம் கடைசியாக பேசியது. மேலும் அவர் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது நான் அழவில்லை எல்லாமே முடிந்து விட்டது. நான் இனியும் கஷ்டப்பட விரும்பவில்லை. என்னையும் தவறாக நினைத்து விட்டார்கள். இந்நிலையில் என் அப்பாவை அடக்கம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவரது உடல் எங்கே இருக்கிறது என்று தெரிந்திருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு தரவில்லை. அவருக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவரை அவர்கள் கடலில் வீசி விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. மேலும் அவரது உடலை மக்கள் பார்ப்பதற்கு அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள் என்று தான் நான் நினைக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.