பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா தனது தோழியான நடாலியாவை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிரஞ்சு ஓபன் தொடரில் அறையிறுதி போட்டி வரை முன்னேறினார். இந்நிலையில் தற்போது தனது தோழியான நடாலியாவை காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஒரே பாலினத்தை சேர்ந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள பல நாடுகள் சட்டபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும் சில நாடுகள் இதற்கு தடை வழங்கியுள்ளன. ரஷ்யாவில் ஒருபால் காதலுக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான சட்டங்கள் உள்ளது. தற்போது அதை விரிபடுத்தும் முயற்சியில் சட்டம் இயற்றுபவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் பேசியதாவது “பிறருக்காக மறைவில் வாழ்வது அர்த்தமற்றது. நாம் நிம்மதியாக வாழ்வது மட்டுமே முக்கியம். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் இது பற்றி பேசுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.