Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் என் மகளை பார்க்க வந்திருக்கேன்…. சிறைக்கு கஞ்சா கொண்டு வந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 கஞ்சா கொண்டு வந்த  பெண்ணை  காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் மத்திய சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக சிறைகள் உள்ளது. இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சுசிலாமேரி என்பவரின் தாயார் பார்த்திமாமேரி  தனது மகளை  பார்ப்பதற்காக நேற்று சிறைக்கு வந்துள்ளார்.

அப்போது சிறை காவலர்கள்  அவரை சோதனை செய்துள்ளனர். அந்த  சோதனையில் அவர் 17 கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து கொண்டு வந்து தனது மகளின் மூலம் சிறையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து சிறைகாவலர்கள் பாத்திமாமேரியை கைது செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |