திருமணம் செய்வது கொள்வது பற்றி எந்த எண்ணமும் இல்லை என நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் கங்கை அமரன் இளைய மகன் பிரேம்ஜி. இவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களைக் கொண்டவர். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறப்பட்டது. பின்னர் குடும்பத்தினர் வற்புறுத்தலால் பிரேம்ஜி ஓகே சொன்னதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அவரது தந்தை கங்கை அமரன் அறிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் பிரேம்ஜி திருமணம் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.
இதற்கிடையில் பாடகி வினய்தா, பிரேம்ஜி இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. இதைப்பற்றி பிரேம்ஜி கூறும்போது “திருமணம் செய்யும் எண்ணமில்லை இருந்திருந்தால் பத்து வருடத்திற்கு முன்பே நான் செய்திருப்பேன். திருமணம், குழந்தைகள் போன்ற எண்ணங்கள் என் வாழ்விலே இல்லை எனவும் அதில் நான் தெளிவாக இருக்கிறேன்”. என்றும் கூறியிருக்கிறார். அவரது இந்த முடிவால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.