Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் எல்லா கேரக்டரிலும் நடிக்க தயார்”…. ஆண்ட்ரியா ஓபன் டாக்…!!!!!

நடிகை ஆண்ட்ரியா தான் நடிக்க உள்ள திரைப்படங்கள் குறித்து பேசி உள்ளார்.

பிரபல நடிகையான ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இத்திரைப்படத்தை கெய்சர் ஆனந்த் இயக்க வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, இப்படத்தில் மது என்ற வேடத்தில் நடித்துள்ளேன். இது ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதை ஆகும். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் மதிக்கு பாலியல் வன்கொடுமை நடக்கின்றது.

அந்த கொடுமைக்கு பிறகு அவர் முடங்கினாளா? இல்லை எழுச்சி பெற்றாளா? என்பதுதான் படத்தின் கதையாகும். இது போன்ற திரைப்படங்கள் வரவேற்பை பெறவில்லை என்றால் அடுத்த படம் உருவாகாது. ஆகையால் படத்தை உயர்ந்த கவனத்துடன் உருவாக்கி இருக்கின்றோம். இத்திரைப்படம் திரையரங்கு வெளியீட்டிற்காக எடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா காலத்தில் திரையரங்கு திறக்கப்படாததால் ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி வெளியாக உள்ளது. நான் எல்லாவித கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |