Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஏங்கி தவிச்சுக்கிட்டு இருந்த போது தான் அது எனக்கு கிடைத்தது”….. வருத்தத்தை தெரிவித்த நடிகர் சூர்யா….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல தரமான படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகவும் சூர்யா 42 படத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து அனைவரும் எதிர்பார்த்த வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த சூர்யா இடையில் சில தோல்விகளை சந்தித்தார். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றியை சூர்யாவிற்கு தேடித் தரவில்லை. எனவே கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார். நடிகர் சூர்யா இருப்பினும் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார். இந்த சூழலில் தான் சூர்யாவுக்கு தொடர் வெற்றி படங்கள் கிடைத்து வருகிறது. அதன்படி சூரரைப்போற்றும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சூர்யாவிற்கு கை கொடுத்தது.

இதனையடுத்து சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியை ஏற்படுத்தியது. அது மட்டுமில்லாமல் கடந்த ஜூன் மாதம் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் திரையில் கொண்டாடி தீர்த்தனர். சமீபத்தில் சூரரைப்போற்றும் படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இதனையடுத்து ஃபிலிம் ஃபார் விருது சூரரைப் போற்றும் படத்திற்காக சூர்யாவுக்கு கிடைத்தது. இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் பேசிய சூர்யா, சூரரைப்போற்றும் படம் தனக்கு கிடைத்ததற்காக சுதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமீப காலமாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் படங்கள் எனக்கு அமையவில்லை. எனவே சரியான படம் அமையாதா என ஏங்கி தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் சுதா கொங்காரா என்னை நம்பி சூரரைப்போற்றும் படத்தில் நடிக்க அழைத்தார். அவருக்கு இந்த சமயத்தில் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |