சென்னையில் நான்கு வயது சிறுவன் ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை கனவை அடையார் துணை ஆணையர் விக்ரமன் நிறைவேற்றி உள்ளார்.
சென்னையில் ஹரிஷ் என்ற நான்கு வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். தனது குட்டி வயதில் ஹரிஷ்க்கு நான் பெரியவன் ஆனதும் போலீஸ் ஆகவேண்டும் என்ற ஆசையும், அதிலும் ஐபிஎஸ் அதிகாரியாக வர வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார். அந்த சிறுவனின் ஆசை அடையாரில் உள்ள காவல் துணை ஆணையரான விக்ரமனுக்கு தெரியவந்ததை அடுத்து நேற்று முன்தினம் ஹரிஷின் பிறந்தநாள் என்பதால் ஆணையர் விக்ரமன் பெற்றோரிடம் சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வர சொன்னார்.
இதையடுத்து காவல்துறை உடை அணிந்து சென்ற சிறுவனின் பிறந்தநாளை துணை ஆணையர் விக்ரமன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் ஆணையர் விக்ரமன் சிறுவனுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டது சமூக வலைதளங்களில் வரிறலாகி, பலரின் பாராட்டைப் பெற்றுவருகிறது. ஹரிஷ் வளர்ந்த பின்பு கட்டாயமாக ஐபிஎஸ் அதிகாரியாக வருவார் என ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.