Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

“நான் ஒன்றும் மிகப்பெரிய உத்தமி எல்லாம் கிடையாது”…. பேட்டியில் விக்ரம் பட நடிகை ஓபன் டாக்…!!!!!

நடிகை மாயா கிருஷ்ணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது.

இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.

விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல், லோகேஷ் கனகராஜுக்கு காரும் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்களுக்கு  பைக்குகளையும் கமல்ஹாசன் பரிசாக வழங்கினார்.

இத்திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்து ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமாகியுள்ளார் நடிகை மாயா கிருஷ்ணன். இத்திரைப்படத்தில் இவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தது தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. பேட்டியின் போது அவர் கூறியதாவது, என்னுடைய சுபாவமே எல்லாவற்றையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்வதுதான். மேலும் நான் ஒன்றும் மிகப்பெரிய உத்தமி எல்லாம் கிடையாது. விக்ரம் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தார்களோ அதற்கு உண்மையாக இருந்து நடித்து கொடுத்து இருக்கிறேன் எனக் கூறியிருக்கின்றார்.

Categories

Tech |