Categories
உலக செய்திகள்

நான் ஒருபோதும் இரக்கம் காட்ட மாட்டேன்…. டுவிட்டரில் துண்டிக்கப்பட்ட நபரின் “கணக்கை புதுப்பிக்க மறுத்த எலான் மஸ்க்” ….!!!!

குழந்தைகளின் மரணத்தின் மூலம் லாபம் தேடுபவர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என எலான் மஸ்க்  கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர்  டிரம்ப். இவர் கடந்த 2020 -ஆம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார். இதற்காக அவரது டுவிட்டர் கணக்கு அப்போது முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான்  மஸ்க் வாங்கி இருப்பதால் அவரது டுவிட்டர் கணக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இதனை பார்த்த எலான் மஸ்க் அவரை   டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து டுவிட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார்.அதில்  51.8%  பேர்  அவரை மீண்டும்  சேர்க்கலாம் என ஆதரவு தெரிவித்தனர். அதன்பின்னர் எலான் மஸ்க்  டிரம்பை  மீண்டும் டுவிட்டரில் சேர்த்தார். இதனையடுத்து பலர் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவரையும்  மீண்டும் டுவிட்டரில்  சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் கூறியதாவது.

அவரின் முதல் குழந்தை அவரது கையிலேயே  உயிரிழந்தது என அவர் தெரிவித்தார். அப்போது அந்த குழந்தையின் கடைசி இதயத்துடிப்பை உணர்ந்தேன். மேலும் குழந்தைகளின் மரணத்தில் லாபம், புகழ் அடைய விரும்பும் நபர்களுக்கு நான் எப்பொழுதும் இறக்கம் காட்ட மாட்டேன். இந்நிலையில் எனது முதல் மகனான நிவாடா அலெக்சாண்டர் பிறந்து 10  மாதத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் ஒரு குழந்தையை இழப்பதை விட மோசமான வழி ஓன்றுமில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சாண்டி ஹிக்  பகுதியில் குழந்தைகள் உள்ளிட்ட 8  பேர்  கொல்லப்பட்ட சம்பவம் புரளி என்று அலெக்ஸ் ஜோன்ஸ் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால் அலெக்ஸ் ஜோன்ஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 7 ஆயிரத்து 893 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |