சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 15 வயதுடைய ஒரு சிறுமையை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தனசேகர் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி அன்று சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து தனசேகர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனசேகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.