Categories
மாநில செய்திகள்

“நான் ஓசில வரமாட்டேன்”…. அமைச்சருக்கு பாட்டி கொடுத்த சரியான அடி…. இது தேர்தலில் எதிரொலிக்குமா?….!!!

திமுக தேர்தல் வாக்குறுதில் ஒன்றான பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநங்கைகளும் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தை குறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் ஓசில்தானே பேருந்தில் போறீங்க என்றும் மற்ற இலவச திட்டத்தையும் குறித்து ஏளனமாக பேசினார். இதனால் பயனாளிகள் மட்டுமில்லாமல் மக்களும் வேதனை அடைந்தனர். இலவசம் என்பதை பெருமையாக வழங்கி வரும் அரசு தனது பயனாளிகளை பார்த்து ஒசி தானே என கேட்பதைப் போல அமைச்சரின் பேச்சு இருந்தது. வெளிப்படையாகவே அமைச்சர் இப்படி பேசுகிறார் என்றும் எளிய மக்களை குறித்து கட்சிக்குள் என்னவெல்லாம் பேசுவார் என்ற கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையை சேர்ந்த பாட்டி துளசியம்மாள் என்பவர் நேற்று மதுரகரையிலிருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறினார். அப்போது “நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் டிக்கெட் கொடு என்று நடத்தினரிடம் வாக்குவாதம் செய்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த பாட்டி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மக்களுக்கு இலவசங்களை கொடுத்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் காட்சிகள் அந்தத் திட்டத்தை வைத்த மக்களை ஏளனமாக பேசினால் விளைவு என்னவாக இருக்கும் என்பதற்கு பாட்டின் வீடியோ சரியான உதாரணம். மக்களின் சுயமரியாதை சீன்டினால் இலவசங்களுக்கு எதிராக புரட்சி வெடிக்க தொடங்கும் என்று அதற்கான பிள்ளையார் சுழியே துளசியம்மாள் பாட்டி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சுயமரியாதை இருப்பது வரவேற்கத்தக்கது. இதே சுயமரியாதையை அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு காசு கொடுக்கும்போது கடைபிடிக்க வேண்டும். தேர்தலில் செய்வதாக அறிவித்த திட்டங்களை செய்யாமல் ஆட்சியின் கடைசி காலத்தில் ஒரு சில இலவசங்களை வழங்கி மக்களை திசை திருப்பிவிட்டு தேர்தலை சந்திக்கும் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்திக்கும். அதை சரி செய்வதற்காகவே ஓட்டுக்கு காசு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டுக்கு பணம் பெறுவதை சாமர்த்தியம் என்று எண்ணுகிறார்கள். மக்கள் அந்த மனநிலையில் இருந்து மாறுவார்களா. மேலும் ஓசி டிக்கெட்டுக்கு எதிராக நடந்த பாட்டின் புரட்சி தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |