சென்னையில் நான் கடவுள் பட பாணியில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 26 குழந்தைகளை சென்னை போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
சென்னையில் நான் கடவுள் பாணியில் போக்குவரத்து சிக்னல் வருகிறது மற்றும் சாலையோரங்களில் சில குழந்தைகளைப் பயன்படுத்தி பெண்கள் சிலர் பிச்சை எடுக்கச் சொல்கிறார்கள். அவ்வாறுபிச்சை எடுத்து வரும் குழந்தைகளை உடனடியாக மீட்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு படை போலீசார், சென்னையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 26 குழந்தைகளை மீட்டு உரிய நல்வாழ்வு மையங்களில் ஒப்படைத்தனர். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பிச்சை எடுத்துக் கொண்டிருந்த குழந்தைகளை மீட்டனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த குழந்தைகள் அனைவரும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தினமும் 100 ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட எட்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.