Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான் கண்டிப்பா ட்ரீட் வைக்கிறேன்’… தளபதி 65 படத்தில் நடிக்கிறாரா குக் வித் கோமாளி பவித்ரா?… அவரே கூறிய பதில்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா தளபதி 65 படத்தில் நடிப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. தற்போது இரண்டாவது சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகர் சதீஷுடன் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

https://twitter.com/KarthikMdr3/status/1381511097455276033

 

மேலும் பவித்ரா நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பவித்ராவிடம் தளபதி 65 படத்தில் நடிப்பது உண்மையா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த பவித்ரா ‘இந்த செய்தியை இப்போது தான் நான் கேள்விப்படுகிறேன். ஒருவேளை அது உண்மையில் நடந்தால் உங்களுக்கு நான் தனியாக ட்ரீட் வைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |