ரிஷப் பந்தை காப்பாற்றிய ஹீரோ சுஷில் மான், கார் விபத்தில் இருந்து பயங்கரமான தருணங்களை நினைவு கூர்ந்தார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளான முழு சம்பவத்தையும் பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் விவரித்தார்.
டிசம்பர் 30ஆம் தேதி (நேற்று) வெள்ளிக்கிழமை அதிகாலை இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் பயங்கர கார் விபத்தில் சிக்கிய பிறகு அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் கூறினார். பந்த் டெல்லியிலிருந்து இருந்து உத்தரகாண்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது கார் விபத்துக்குள்ளானது. டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் பென்ஸ் கார் மோதியதில் தீப்பிடித்தது.
25 வயதான பண்ட் தனது தாயை ஆச்சரியப்படுத்த தனது சொந்த ஊரான ரூர்க்கிக்குச் சென்று கொண்டிருந்தபோது கண் அசந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் கார் முற்றிலும் தீ பிடிப்பதற்கு முன் காரின் ஜன்னல் கதவை உடைத்து பண்ட் வெளியேற முயன்ற போது அந்த வழியாக வந்த ஹரியானாவை சேர்ந்த பஸ் டிரைவர் சுஷில் குமார் (மான்) மற்றும் நடத்துனர் பரம்ஜீத் அவர்களுடன் சில பயணிகள் அவரை படுகாயங்களுடன் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முதலில் சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதனை தொடர்ந்து டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பண்ட் சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப்பின் நெற்றியில் 2 வெட்டுக்கள், வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது மற்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் ஆகியவற்றிலும் காயம் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரிஷப்பின் நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சுமார் 300 மீட்டர் தொலைவில் நடந்ததாக சுஷில் மான் கூறினார், அதன் பிறகு அவரும் பேருந்தில் இருந்த பயணிகளும் பந்தை காப்பாற்ற வந்தனர். தீப்பிடிக்கும் முன் பண்டின் கார் மூன்று முதல் நான்கு முறை திரும்பியதாக மான் குறிப்பிட்டுள்ளார். விபத்து நடக்கும் போது, பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறினார்.
பஸ் டிரைவர் சுஷில் குமார் கூறியதாவது, நான் ஹரித்வாரில் இருந்து அதிகாலை 4:25 மணிக்கு புறப்பட்டபோது, ஒரு நிறுத்தத்தில், எனது பேருந்தை மெதுவாக்கினேன், 300 மீட்டர் தொலைவில் சிறிது வெளிச்சம் அங்கும் இங்கும் நகர்வதைக் கண்டேன். அது ஒரு காரா என்று யூகிக்க கடினமாக இருந்தது. என் நடத்துனரிடம் ஏதோ தவறு நடந்ததாகவும் விபத்து நடந்ததாகவும் கூறினேன். சுமார் 100 மீட்டர் தொலைவில், ஹரித்வார் பகுதியில் கார் ஒரு டிவைடரின் மீது மோதியது. பேருந்து காரை நெருங்கியதும் பயணிகள் பயந்தனர்” என்று இந்தியா டுடேக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மான் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் கார் டிவைடரில் மோதிய பிறகு அது ஏற்கனவே 3 முதல் 4 முறை கவிழ்ந்தது. பண்ட் காருக்கு வெளியே பாதி, உள்ளே பாதி என்ற நிலையில் இருந்தார். நான் பிரேக் அடித்தேன், நானும் எனது நடத்துனரும் வெளியே சென்று அவரை காருக்கு வெளியே மீட்டோம். பேருந்தில் இருந்த பயணிகளும் எங்களுக்கு உதவினார்கள்.
நான் அவனிடம் தனியாக இருக்கிறாயா என்று கேட்டேன், அவன் ‘ஆம்’ என்றான். அவர் சுயநினைவுடன் இருப்பதைக் கண்டேன். கார் ஏற்கனவே தீப்பிடித்திருந்தது, விஷயங்கள் மிக விரைவாக முடிந்திருக்கும், மேலும் பந்த் உயிர் பிழைத்திருக்க மாட்டார். அப்போது அவர், ‘நான் ரிஷப் பந்த் மற்றும் கிரிக்கெட் வீரர்’ என்று கூறினார். கபடியை பின்பற்றுவதால் நான் பெரிய கிரிக்கெட் ரசிகன் இல்லை. அவரை வெளியே எடுத்து டிவைடரில் கிடத்தினோம். அவர் அம்மாவிற்கு போன்போட சொன்னார். போன் போட்டோம் ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
தண்ணீர் கேட்டார், நாங்கள் கொடுத்தோம். பயணிகளில் ஒருவர் அவரை துணியால் மூடினார். ஒருபுறம், நான் காவல்துறையை அழைக்க முயற்சித்தேன், ஆனால் அது பிஸியாக இருந்தது. ஆம்புலன்ஸும் பிஸியாக இருந்தது. பின் 15 நிமிடத்திற்குள் போலீசார், ஆம்புலன்ஸ் வந்தபின் அனுப்பி வைத்தோம். ரிஷப் பணம் ரோட்டில் சிதறி கிடந்தது. ஏழெட்டாயிரத்திலிருந்து எட்டாயிரம் ரூபாயை எடுத்து ரிஷப்பின் கையில் வைத்தேன். காரில் பிரீஃப்கேஸ் இருந்தது. பிரீஃப்கேசையும் ஆம்புலன்சில் போட்டதாக தெரிவித்தார்.
ஹரியானா ரோட்வேஸ் பானிபட் டிப்போவின் பொது மேலாளர் குல்தீப் ஜங்ரா பானிபட் திரும்பியதும் அலுவலகத்தில் பஸ் டிரைவர் சுஷில் குமார் மற்றும் பரம்ஜீத் ஆகியோருக்கு ஒரு பாராட்டு கடிதம் மற்றும் கேடயம் கொடுத்து கவுரவித்துள்ளது. இதற்கிடையே முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான விவிஎஸ் லக்ஷமன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் டிரைவர் சுஷில் குமாரை பாராட்டினர். #SushilKumar என்ற ஹெஸ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கிரிக்கெட் ரசிகர்கள் இணையவாசிகள் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.
ரிஷப் பந்திற்கு உதவிய ஹரியானா ரோட்வேஸ் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்டோருக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ‘நற்கருணை வீரன்’ விருது வழங்கப்படும் என உத்தரகாண்ட் காவல்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.