12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பெரியார் நகரில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகாமியின் உடலை பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சிவகாமி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற கணித தேர்வை நான் சரியாக எழுதவில்லை. நான் நன்றாக படித்து கலெக்டராக வேண்டும் என்பது எனது பெற்றோரின் விருப்பம். ஆனால் அந்த அளவிற்கு என்னால் படிக்க முடியவில்லை. என்னால் கலெக்டராக முடியாது. இதனை அறிந்த பெற்றோர் என்னிடம் சரியாக பேசுவதில்லை. நான் இப்படியே படித்தால் எனது பெற்றோர் என்னை திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். எனவே அப்பா, அம்மா இருவரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் கடவுளிடம் செல்கிறேன். எனது உடலை பார்க்க வரும் பள்ளி நண்பர்களை அனுமதிக்கவும் என மாணவி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.