Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் கலைஞரின் பிள்ளைடா”… பதிலடி கொடுத்த ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் 1957 ஆம் ஆண்டு கலைஞரின் சட்டமன்ற பேச்சு விவசாயிகளைப் பற்றி தான், நான் அவருடைய பிள்ளைடா என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து  தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின் கூறுகையில், “1957 ஆம் ஆண்டு கலைஞரின் சட்டமன்ற கன்னிப் பேச்சே விவசாயிகளைப் பற்றி தான். நான் அவருடைய பிள்ளைடா. எங்கள் மீது எந்த வழக்கை போட்டாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். தடையை மீறி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியதால் வழக்கு பதிவு செய்வார்கள். அறிக்கை நாயகன் பட்டத்தை நான் ஏற்றுக் கொள்வேன். ஊழல் நாயகன் பட்டத்தை நீங்கள் ஏற்பீர்களா? டெல்லி போராட்டம் வெற்றிபெறும் வரை திமுக போராட்டம் தொடரும்”என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |