Categories
தேசிய செய்திகள்

நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை…. “சோனியாவிடம் மன்னிப்பு கேட்ட அசோக் கெலாட்”…. என்ன காரணம்?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்று அறிவித்தவுடன் சசி தரூரும், அசோக் கெலாட்டும் போட்டியில் இருந்தார்கள். அதில், அசோக்கெலாட் காங்கிரஸ் தலைவராக வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது தான் போட்டியிடவில்லை என்று அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் மாநில முதல்வரும், மூத்த தலைவருமான அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தான் போட்டியிடவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை அசோக் கெலாட் ராஜினாமா செய்ய கட்சி தலைமை உத்தரவிட்டது. ஆனால் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்தார் கெலாட்..

ஏனெனில் அண்மையில் ராஜஸ்தானுக்கு புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற திட்டமிட்டு 2 முறை இந்த கூட்டம் என்பது ரத்து செய்யப்பட்டது. ஏனென்றால் அசோக் கெலாட்டை மாற்றிவிட்டு சச்சின் பைலட்டை முதல்வராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்பிய நிலையில், அந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக்கெலாட்டின் 92 எம்எல்ஏக்கள் ஒருவேளை சச்சின் பைலட் முதல்வராக தேர்வு செய்யப்பட்டால், நாங்கள் (92 எம்எல்ஏக்கள்) ராஜினாமா செய்து விடுவோம் என வெளிப்படையாக கட்சி தலைமையை மிரட்டினர்..

இதன் காரணமாகத்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்யிடவில்லை என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.. இந்த ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைந்து விடும் என்ற அளவிற்கு குழப்பம் நிலவியதையடுத்து இன்று சோனியா காந்தியை சந்தித்து ராஜஸ்தான் மாநில தற்போது அரசியல் சூழல் குறித்தும் எதிர்பாராத திருப்பங்களுக்கு தன்னுடைய மனப்பூர்வமான மன்னிப்பையும் கூறியிருக்கிறார் அசோக் கெலாட்…

தான் 50 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் தொண்டன், மிக மூத்த தலைவர் இதனால் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் என்பது தற்போது நீடித்து வருகிறது. இந்த குழப்பத்திற்கு முடியும் தரும் வகையில் தான் தலைவர் தேர்தலில் இருந்து விலகி இருப்பதாக செய்தியாளரிடம் தெரிவித்து, சோனியா காந்தியிடம் ராஜஸ்தான் மாநில சம்பவத்திற்கு வெளிப்படையாக மன்னிப்பு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |