Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் காட்டுப் பசியில் இருக்கிறேன்” ஒரு நடிகராக அதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்….. மனம் திறந்த பிரபலம்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு கௌதமேனன் இயக்கத்தில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, சித்தி இத்னானி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்த படத்தை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் நடிகர் சிம்புவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் காட்டுப் பசியில் இருக்கிறேன். அதனால் கதைகளை எல்லாம் நான் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். அதிக கதைகள் வருகிறது. இருந்தாலும் என்னுடைய காட்டு பசிக்கு தீனி போடும் வகையில் தான் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

Categories

Tech |