Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன்”….. நான் ஒரு அவதாரம்….. சீமான் பரபரப்பு பேச்சு….!!!!

நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன். நான் ஒரு அவதாரம் என்று சீமான் பேசியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகள் கூட்டணியாக இருக்கும் அதிமுகவின் ஊழலை பற்றி மட்டும் பேசாமல் உள்ளார். ஊழலுக்காக சிறை சென்ற தலைவியின் கட்சியில் கூட்டணி வைத்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் ஊழல் குறித்து பேச தகுதி இல்லை என்று கூறினார்.

மேலும் மக்கள் என்னை தேடி நிச்சயம் வருவார்கள். அதுவரை நான் பொறுமையாக இருந்து கிருஷ்ணபரமாத்மா வாரிசாக அவதாரம் எடுத்து மக்களை  காப்பாற்றுவேன். நான் ஒரு அவதாரம். அநீதி, அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் வந்து நிற்பேன் என்று அவர் பேசியுள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் எத்தனை கட்சிகள் நின்றாலும் நாம் தமிழர் கட்சி தனியாக நிற்கும். அண்ணாமலையால் அது முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |