Categories
சினிமா தமிழ் சினிமா

நான் குணமாகி வருகிறேன்… கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சரத்குமார் ட்வீட்…!!

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் சரத்குமார் தன் உடல்நிலை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகர் சரத்குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்ற போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நடிகர் சரத்குமாருக்கு கொரானா இருப்பதாக அவரின் மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி இருவரும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில் தன் உடல் நலம் குறித்து சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்’ கடவுளின் அருளாலும், அப்பல்லோ மருத்துவ குழுவின்  ஆதரவாலும், குடும்பத்தார், நண்பர்கள், நலம் விரும்பிகள், திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோரின்  பிரார்த்தனையால் நான் குணமாகி வருகிறேன். விரைவில் பழையபடி நான் என் வேலையை தொடங்குவேன்’ என பதிவிட்டுள்ளார். நடிகர் சரத்குமாரின் இந்த ட்வீட்டை பார்த்த அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |