Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நான் கேட்டும் எனக்கு தரல” கொடூரமாக கொலை செய்யப்பட்ட தந்தை… வாலிபரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

பெண் தர மறுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து  காதலியின் தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சுனாமி நகரில் சுப்ரமணியன் என்ற மீனவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். முதல் மனைவிக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார். ஆனால் தற்போது இரண்டு மனைவிகளும் உயிரோடு இல்லை. இந்நிலையில் தனது இரண்டாவது மனைவியின் மகளுக்கு சுப்பிரமணியன் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதனால் தனது முதல் மனைவியின் மகள் வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்த செலவுக்காக 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் சுப்பிரமணியன் வீட்டிற்கு வரவில்லை. இதனால்  அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். ஆனாலும் சுப்ரமணியன் கிடைக்கவில்லை. இதனையடுத்து சுப்பிரமணியன் கண்டக்காடு – குண்டு உப்பலவாடி சாலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த காயங்களுடன் கிடந்த சுப்ரமணியனின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அவர் தன் மகளிடம் வாங்கிவந்த பத்தாயிரம் ரூபாயும் அவரிடம் இல்லை. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து   விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் சந்தேகத்தின் பேரில் கத்துக் குளத்தை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அதில் ஒருவர் சுப்ரமணியனின் மகளை 5 வருடமாக காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சுப்பிரமணியனின் மகளை வேறு ஒரு வாலிபருக்கு திருமணம் செய்து வைக்கப் போவதை அறிந்த காதலர், தான் காதலித்த பெண்ணை தனக்கே திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் சுப்பிரமணியன் மகளை அந்த வாலிபருக்கு திருமணம் செய்து தர மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த கோபத்தில் தான் சுப்பிரமணியனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக அந்த வாலிபர் காவல்துறையிரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |