Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாரேன்” பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பெயிண்டரான உமர்பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வெளியே செல்வதாக குடும்பத்தினரிடையே கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உமர்பாரூக் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே ரத்த காயங்களுடன் உமர்பாரூக் உயிருக்கு போராடிய  நிலையில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்த உமர்பாரூக்கை மீட்டு சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உமர்பாருக் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உமர்பாரூக்கை  6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த 6 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |