சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “மதநல்லிணக்க எதிராகச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்”. தமிழ்நாடு நம்பர் 1 ஆக வேண்டும் என்ற என்னுடைய கனவு திட்டத்தை உங்களை நம்பி ஒப்படைக்கிறேன். அதற்காக நீங்கள் நேர்மை அர்ப்பணிப்பு செயல்பட வேண்டும் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
Categories