உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. அதில் 5 கட்ட வாக்குப் பதிவுகள் இதுவரை நடந்து முடிந்துள்ள நிலையில் 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எதிரிகள் சிலர் நான் மரணிக்க வேண்டும் என்று வாரணாசியில் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இது போன்ற செயல்கள் அரசியலில் சிலர் எப்படி எல்லாம் தரம் தாழ்ந்து செல்கின்றனர் என்பதற்கு ஒரு சான்று. நான் உயிர் பிரியும் வரை காசியை விட்டு செல்ல மாட்டேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமர் மோடி தான் சாகவேண்டும் என்று சில எதிரிகள் யாகம் நடத்தி வருவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.