Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“நான் சாகப்போகிறேன்”…. படுக்கையில் கிடந்த கடிதம்…. வாலிபர் திடீர் மாயம்….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள சடையநேரியில் அறிவுமணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அறிவுமணி மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்தின்போது அறிவுமணிக்கு கொடுத்த சீர்வரிசை பொருட்களை எடுப்பதற்காக வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அறிவுமணி பலத்தகாயம் அடைந்த நிலையில் அவரது உறவினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அறிவுமணி திடீரென மருத்துவமனையில் இருந்து மாயமாகியுள்ளார். இதனையடுத்து அவர் இருந்த படுக்கையில் ஒரு கடிதம் இருந்ததுள்ளது. அந்த கடிதத்தில் “நான் சாகப்போகிறேன்” என்று எழுதி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அறிவுமணியின் தந்தை உடனடியாக ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அறிவுமணியை தேடி வருகின்றனர்.

Categories

Tech |