நான் ஒரு சாதாரண ஆளு, இப்போது விட்டால் ஆடு மேய்க்க ஓடி விடுவேன் என பாஜக மாநில தலைவர் எளிமையாக பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நான் வேறு யாரும் கிடையாது. நான் சாதாரண ஆளு, தொட்டம்பட்டி கிராமத்தில் பிறந்து, இப்பக்கூட என்னை விட்டீர்கள் என்றால் ஆடு மேய்க்க ஓடிவிடுவேன். பிடிச்சி கொண்டு வந்து உட்கார வைத்துள்ளார்கள். எனக்கு மிகுந்த சந்தோஷம் என்பது என்னுடைய கிராமத்தில் விவசாயம் செய்வதற்காக தான் வேலையை விட்டுவிட்டு வந்தேன். காலத்தினுடைய கட்டாயம், காலத்தில் சூழ்நிலை இன்று ஒரு முக்கியமான அரசியல் கட்சியில்…
சித்தாந்தம் இருக்கும் ஒரு அரசியல் கட்சியில் நானும் ஒரு தொண்டனாக வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன். அதனால் நான் எந்த ஒரு பெரிய மனிதரும், சிறிய மனிதனும் கிடையாது. அண்ணாமலை அண்ணாமலை தான். அதனால் நல்லது நடக்கட்டும் தமிழகத்தில் என எப்படி நீங்க எல்லாம் நினைக்கிறீர்களோ, அதே போல தான் நானும் நினைக்கிறேன். யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று கிடையாது.
என்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாக என்னுடைய பாணியில் நான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் அதிகமான ஆர்ப்பாட்டம் செய்வது பாரதிய ஜனதா கட்சி தான். உங்களுடைய தகவலுக்காக சொல்கிறேன், பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும். எல்லா விஷயத்திலும் மக்கள் பிரச்சினையாக காவிரியிலிருந்து, விவசாய சட்டத்திலிருந்து, அன்றாட பிரச்சினைகள் எல்லாமே கையிலெடுக்கிறோம்.
கோவில் பிரச்சினையிலிருந்து நம்முடைய ஆலயங்களில் இருந்து… எனவே இயற்கை என்பது மிக முக்கியம் தான், அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. பாரதிய ஜனதா கட்சியில் கூட பார்த்தீர்கள் என்றால்…. சுற்றுச்சூழல் அணி ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. மாசுபடாமல் காப்பாற்ற வேண்டும், அடுத்த தலைமுறைக்கு நாம் இதைக் கொடுக்க வேண்டும்.
அதுதான் எங்களுடைய நோக்கம். நிச்சயமாக இயற்கையின்பால் பாரதிய ஜனதா கட்சி எப்போதும் நிற்கும். தேவைப்படும்போது பாரதிய ஜனதா கட்சி எந்த விதத்தில் செல்வதற்கு தயார் என அண்ணாமலை கூறினார்.