Categories
தேசிய செய்திகள்

“நான் சாதாரண ஸ்டாலின் அல்ல”…. முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு திமுகவினர் அதிர்ச்சி…!!!!

தமிழகத்தின் உரிமைக்காகவே தலைநகர் டெல்லிக்கு சென்று உள்ளேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் இன் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மணமகன் வினோத்குமார், மணமகள் ரேவதிக்கு அவர் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசிய போது, மக்கள் நம்முடைய மதசார்பற்ற ஜனநாயக கட்சி அமைப்பின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் நமக்கு ஆதரவை தந்து தேர்ந்தெடுத்துள்ளனர். நாம் ஆட்சிக்கு வந்த பின்தான் உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு வெற்றி பெற்றதற்கு காரணம் மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை  ஆகும். முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தால் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. நிச்சயமாக, உறுதியான கலைஞர் சாதித்த வழியில் நானும் சாதிப்பேன் என்ற என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் நான் அண்மையில் துபாய் சென்றபோது பல கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கூறி உள்ளார். அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எதிர்க்கட்சியினர் பதில் சொல்லிவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் தலைநகராக இருக்கக்கூடிய டெல்லிக்கு நான் பயணம் மேற்கொண்டேன். அங்கு நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்தில் உரிமைக்காக குரல் கொடுத்தேன். ஆனால் அதையெல்லாம் மூடிமறைக்க, தாங்கிக்கொள்ள முடியாத சிலர் ஏதோ அச்சத்தின் காரணமாக, ஏதோ சிக்கலில் இருந்து தப்பிப்பதற்காக நான் டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளதாக கூறியுள்ளனர்.

ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன் டெல்லி சென்ற நான் யாருடைய காலிலும் விழவில்லை. தமிழ்நாட்டின் உரிமை காகத்தான் டெல்லி சென்றேன்.  ஏன் என்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல பதவியேற்றபோது நான் சொன்னேன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என நான் கலைஞருடைய மகன் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே உழைப்பேன் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |