அன்னபூரணி அரசு அம்மா ஆதி பராசக்தியின் மறு உருவமான ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறிவைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்து கொண்டுள்ளார்.
அதன்பின்னர் தனது கணவரையும் 14 வயது பெண் குழந்தையும் விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு மர்மமான முறையில் இறந்து விடவே, சிலகாலம் யார் கண்ணிலும் படாமல் வாழ்ந்து வந்திருந்த அன்னபூரணி தற்போது ஆதிபராசக்தி மறு உருவமாக அழைக்கப்பட்டு சாமியாராக வலம் வருகிறார். இந்த தன்னைப் பற்றி இணையதளத்தில் அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்னபூரணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
கடந்த சில நாட்களாக இணையத்தில் வெளியான வீடியோக்களால் அன்னபூரணி பிரபலமானார். சர்ச்சைகளும் அவரை தொடர்ந்து சுற்றி வந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தன்னை பற்றி அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதே நேரம் தன்னை சாமியார் என எப்போதும் சொன்னதில்லை என்றும் ஆன்மீக பயிற்சியை மட்டுமே வழங்கி வருவதாகவும் கூறினார்.