தான் இறந்தால் மட்டுமே தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் தான் செய்த சாதனைகள் தெரியவரும் என்று பிக் பாஸ் பிரபலம் மீராமிதுன் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். அதன்பிறகு இவர் பலரையும் விமர்சித்து பேசியதால் இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. அதனால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது கடந்த 6 மாதங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து திரிவதால் வருமானம் இல்லாமல், காசு இல்லாமல், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பதாக வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தெருவில் போகிறவர்கள் எல்லாம் தவறாக பேசுவதால் வீட்டில் தன்னை சேர்த்துக்கொள்ள பெற்றோர்கள் மறுக்கிறார்கள் என்றும், தான் இறந்தால் மட்டுமேதமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் தான் செய்த சாதனைகள் அனைத்தும் தெரியவரும் என்று அவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.