நடிகை சில்க் ஸ்மிதா பயோபிக்கில் நடிகை அனசுயா நடிக்கயிருப்பதாக பரவிய தகவலுக்கு ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.
நடிகை சில்க் ஸ்மிதா தமிழ், இந்தி ,தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் 450 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். அனைத்து மொழி ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்த சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் வாழ்க்கை வரலாறு ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கப்பட்டது. அதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடித்து இருந்தார் .
I am NOT playing #SilkSmita garu in any biopic. Thank you. 🙂
— Anasuya Bharadwaj (@anusuyakhasba) December 9, 2020
தற்போது தமிழில் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் உருவாகி வருவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து நடிகை அனசுயா சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகை அனசுயா ‘நான் சில்க் ஸ்மிதாகாருவாக எந்த பயோபிக்கிலும் நடிக்கவில்லை. நன்றி’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் .