நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் வீட்டில் இருப்பதை எவ்வளவு கஷ்டம் என்று கூறும் விதமாக வடிவேலு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால்விட்டு நடித்து இருந்தேன்.
அதை வெறும் படத்துக்காக தான் செய்தேன். உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இறைவன் உணர வைத்து இருக்கிறான். பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம் என நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.