Categories
இந்திய சினிமா சினிமா

நான் சுஷாந்தின் காதலி ரியா… “சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்க… அமித்ஷாவுக்கு கைகூப்பி வேண்டுகோள்..!!

சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து அவரின் காதலி உள்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் சிங் இறப்பிற்கு காரணம் வாரிசு நடிகர்கள், வாரிசு நடிகர்களை உருவாக்கும் இயக்குனர்கள் இவர்கள் கொடுத்த மன உளைச்சலால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சுஷாந்த் சிங் மரணம் அடைந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இதனால் பலரும் மீண்டும் அவர் மரணம் குறித்து பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதை  பற்றி சுஷாந்த் சிங்கின் காதலி பதிவிட்டுள்ள பதிவில் கூறியதாவது, “மதிப்பிற்குரிய அமித்ஷாவுக்கு நான் சுஷாந்தின் காதலி ரிகா அவரின் திடீர் மறைவு நிகழ்ந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது அரசின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது இதில் நீதிவேண்டி சிபிஐ விசாரணைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று நான் கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். அவர் இந்த முடிவை எடுக்க தூண்டியது எது என நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

Categories

Tech |