Categories
தேசிய செய்திகள்

“நான் செத்துட்டா என்னோட குழந்தைகளை யாரு பார்த்துப்பா”… 2 குழந்தைகளை கொன்று… தாய் செய்த கொடூர சம்பவம்…!!!

பல்லாரி டவுனில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பல்லாரி டவுனி, பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இந்திரா நகரை சேர்ந்த சித்தப்பா என்பவரின் மனைவி சுனிதா. இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், யஷ்வந்த், சான்வி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதும், பிறகு அவரை சமாதானப்படுத்தி கணவர் வீட்டிற்கு அழைத்து வருவதும் ஆகவே சென்று கொண்டிருந்தது.

கடந்த 10 நாட்களாக கணவன் மனைவி இருவருக்கும் சண்டை மிக அதிகமானதால் விரக்தியில் இருந்த சுனிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகளை கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று எண்ணி முதலில் குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டார். வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து குழந்தைகளை கொலை செய்து விட்டு, பின்னர் சுனிதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுனிதாவின் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |