அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி, மகன் உதவியுடன் கணவனை கழுத்தை அறுத்து செய்துள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தவசீலன் என்பவர் கேரளாவிற்கு கூலி வேலை பார்க்கச் சென்றுள்ளார். அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகுதான் கேரளாவிற்கு செல்லும் போது தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று பணத்தை கேரளாவிற்கு எடுத்துச் செல்வதாக கூறி உள்ளார்.
அதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளைய மகன் சிவராஜ் என்பவரை தவசீலன் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த மனைவி சுதா தனது மகன் உதவியுடன் கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.