காஞ்சிபுரம் அருகே லஞ்சம் வாங்க முற்பட்ட சப் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காவல் நிலையத்தில் சிவராஜ் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் ஜெகதீசன் என்பவர் பில்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பில்டிங் காண்ட்ராக்டரான ஜெகதீசன் மீது இருக்கும் சில வழக்குகளிலிருந்து அவரை விடுவிக்க ரூபாய் 20,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெகதீசன் அப்பகுதியிலிருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியான கலைச்செல்வன் என்பவரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரை ஏற்ற கலைச்செல்வன், சிவராஜாவை மடக்கிப் பிடிக்க ஜெகதீஸ்க்கு திட்டம் போட்டு கொடுத்துள்ளார். அதன் படி ஜெகதீஷ் ஆரணி பஜார் தெருவிற்கு சப் இன்ஸ்பெக்டரை வரச்சொல்லி 20,000 ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் திட்டமிட்டபடி சப் இன்ஸ்பெக்டரை கையும், கலவுமாக பிடித்துள்ளார்கள். அதன் பின் அவரை ஆரணியிலிருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பலவிதமான கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.