Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நான் சொல்லி தருகிறேன்….. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கணக்கு பாடம் சொல்லித் தருவதாக கூறி வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கணக்கு பாடத்தில் சந்தேகம் இருப்பதாக பிரகாஷிடம் கேட்டுள்ளார். இதனால் பாடத்தில் இருக்கும் சந்தேகத்தை தீர்ப்பதாக கூறி அழைத்து சென்று பிரகாஷ் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |