Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்லுறத செய்யுறாரு…! ஒரு அறிக்கை கூட விடல… எல்லாமே தேர்தல் வேஷம் …!!

தமிழக முதல்வரின் அறிவிப்பு எல்லாமே தேர்தலுக்கான வேஷம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், முதல்வர் இப்போ நான் சொல்லுறதை தானே அறிவிச்சிட்டு இருக்காரு. அதுவும் கடைசி இரண்டு மாசத்துல பார்த்தீங்கன்னா…. கூட்டுறவு கடன் ரத்து என்று நான் சொன்னேன். செஞ்சாரு முதல்வர். மகளிர் சுய உதவி குழு கடன் ரத்துன்னு சொன்னேன். செஞ்சாரு முதல்வர்.  நகை கடன் ரத்துனு சொன்னேன் செஞ்சாரு முதல்வர்.

செய்யக்கூடியவை தான் சொல்லுவேன்,  நான் சொன்னதும் முதல்வர் செஞ்சி வைப்பார். நான் சொல்றதுக்கு முன்னாடி அவருக்கு அது தோணாது. ஏன்னு கேட்டா அவருடைய நோக்கம்  இதெல்லாம் இல்லை. கமிசன் தான், கலெக்ஷன் தான், கரப்ஷன் தான். அதனால மக்களுடைய நலனை பற்றி எதுவும் அவருக்கு ஞாபகம் வராது.

இப்போ தேர்தல் நெருங்கி வருவதால் இது எல்லாத்தையும் தனக்கு தோன்றியதை போல செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. இன்றைக்கு அரசியல் லாபம்களுக்காக தேர்தல் நேரத்தில் பகல் வேஷம் போட்டுக்கிட்டு,  பகட்டு வாக்குறுதிகளை முதல்வர்  செஞ்சுகிட்டு இருக்காரு.பசப்பு காரியங்கள் செஞ்சுக்கிட்டு வராரு முதல்வர்.

முதலமைச்சர் என்பதை மறந்து தான்தோன்றித்தனமாக அறிவிப்புகளை செஞ்சுகிட்டு வராரு. அவர் செய்கிற அறிவிப்புகளை…  திட்டங்களை…. பற்றி அவருக்கு உள்ளார்ந்த ஈடுபாடு இல்லை. அவருக்கு எந்த காலத்திலும் இருந்ததில்லை. பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மத்திய அரசு பணிகளில் பெறவேண்டிய அனைத்து உரிமைகளையும் மத்திய பாஜக அரசு பறித்து விட்டது. அதுக்கு எதிரா…  ஒரே ஒரு அறிக்கை கூட விடாதவர் தான் முதல்வர்.

மத்திய அரசு பணி என்பது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்காம செய்த சதியை தடுக்க முடியாதவர் முதல்வர். ஆனால் இன்றைக்கு தேர்தல் நேரத்தில் சமூக நீதி நாடகத்தை முதல்வர்  போட்டு இருக்காரு. விவசாயி என போட்ட வேஷம் தேர்தலுக்காக….  சமூக நீதினு போடுற வேஷமும் தேர்தலுக்காக தான் என தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆட்சி முடிக்கிறப்போ அரைவேக்காடு அறிவிப்புகள் மூலமாக சமூக நீதியை காக்க முடியாது என முக.ஸ்டாலின் பேசினார்.

Categories

Tech |