கொ ரோனா பற்றியும் இந்திய பொருளாதாரம் பற்றியும் நான் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால் யாரும் கேட்பதாக இல்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சீனாவின் லடாக் எல்லை பகுதி பிரச்சினையில் மத்திய அரசினுடைய அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ந்து குற்றம்சட்டி வருகிறார். இது பற்றி அவர் ஏற்கனவே 2 வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி மீது அவர் கூறிய விமர்சனங்களுக்கு பாரதீய ஜனதா கட்சி சார்ந்த தலைவர்கள் பதிலடி கொடுத்திருந்தனர்.
ராகுல் காந்தி தொடர்ச்சியாக தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்து பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- கொரோனா பற்றியும், இந்திய பொருளாதாரம் பற்றியும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை , அதனால் பேரழிவு ஏற்பட்டது. தற்போது சீனா பற்றியும் எச்சரித்து வருகிறேன்; இதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.