நான் டிராக்டரில் சோபா போட்டு அமர்ந்ததை விமர்சனம் செய்துள்ள நீங்கள், பிரதமர் வாங்கியுள்ள சொகுசு விமானத்தை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டிராக்டரில் சோபா போட்டு அமர்ந்து சென்றுள்ளார். அதற்கு மத்திய மந்திரி ஸ்மிருதி உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியை கிண்டல் செய்து பல பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் அதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, “என் நலம் விரும்பி யாரோ ஒருவர் டிராக்டரில் சோபாவை போட்டுள்ளார். இருந்தாலும் பிரதமர் மோடியின் மக்கள் வரிப்பணத்தில் இருந்து 8000 கோடி ரூபாவை செலவு செய்து புதிய ஆர் இந்தியா ஒன் விமானம் வாங்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் சோபா மட்டுமல்லாமல் பிரதமரின் வசதிக்காக சொகுசு படுக்கைகள் இருக்கின்றன. அதனை எல்லாம் யாரும் கவனிப்பதில்லை. கேள்வியும் கேட்பது கிடையாது. தன்னுடைய நண்பர் ட்ரம்ப், அதேபோன்ற விமானத்தை வைத்திருப்பதால், மோடியும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து அந்த விமானத்தை வாங்கியிருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.