Categories
தேசிய செய்திகள்

நான் ஜோதிடரை சந்தித்தேனா?…. வருங்காலத்தை மாற்றும் சக்தி என் மணிக்கட்டுக்கு இருக்கு…. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதில்….!!!!

“நான் ஜோதிடரை பார்த்தேனா?.. வருங்காலத்தை மாற்றும் சக்தி என் மணிக்கட்டுக்கு உள்ளது. இதனால் உள்ளங்கையை யாருக்கும் காண்பிக்கவேண்டிய அவசியம் கிடையாது என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டே பதில் அளித்துள்ளார். முன்னதாக தன் எதிர் காலம் குறித்து நிலையற்ற தன்மை நிலவுவதால், அனைத்துப் பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு ஏக்நாத்ஷிண்டே ஜோதிடரைப் பார்க்கச் சென்று விட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு பதில் அளித்திருக்கும் முதலைச்சர், எந்த ஜோதிடரிடமும் சென்று என் உள்ளங்கையை காண்பிக்கவேண்டிய அவசியமில்லை.

உள்ளங்கை ரேகைகளை மாற்றக்கூடிய சக்தி மணிக்கட்டில் உள்ளபோது, அதற்கான சக்தியை பாலா சாஹேப் தாக்கரே மற்றும் ஆனந்த் திக்கே அளிக்கிறார்கள் எனவும் அவர் கூறினார். ஷிண்டே சென்ற புதன்கிழமை இஷானேஷ்வர் மகாதேவ் கோவிலுக்குச் சென்றிருந்தார். இதற்கிடையில் ஷிண்டேவுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறது. இதனால் அவ்வப்போது ஜோதிடர்களைச் சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டவர் என்பதால், அவர் தன் எதிர்காலம் பற்றி அறிய ஜோதிடரைச் சந்திக்கச் சென்றதாக எதிர்க் கட்சிகள் கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |