நித்யா மேனன் இயக்குனராவதற்கு தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருகின்றார் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சோபனா என்ற கேரக்டரில் நடித்துள்ள நித்யா மேனனின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நித்யா மேனன் தயாரிப்பாளர்களை அவமதிப்பு செய்வதாகவும் கதைகளில் தலையிட்டு மாற்றம் செய்யும்படி இயக்குனர்களை வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்தது. இது பற்றி அவர் கூறியதாவது, என்னிடம் 200 பேர் கதை சொன்னால் நான்கு அல்லது ஐந்து கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன். வழக்கமான படங்களில் நடிப்பது இல்லை. எனக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே கூறுவேன்.
மேலும் அவரிடம் டைரக்டராகும் ஆசை பற்றி கேட்டபொழுது அவர் கூறியதாவது, எனக்கு டைரக்டராக வேண்டுமென்ற ஆசை உள்ளது. டைரக்டர் ஆவது பயனுள்ளதாக இருக்குமா என யோசித்து வருகின்றேன். இருப்பினும் நான் டைரக்டராவது கண்டிப்பாக ஒருநாள் நடக்கும் எனக் கூறியுள்ளார்.
https://www.instagram.com/reel/ChAFlImh9A0/?utm_source=ig_embed&ig_rid=7d092d8a-39cf-4308-acd7-f17e0e6727d9